10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வுகள் துவக்கம்!
நடப்பு கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளன.
பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் செய்முறை தேர்வுகள் துவங்குகின்றன. இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பொதுத் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் ஒரே கட்டமாக நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியான நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பிப்ரவரி மாதம் 15ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன.
இதற்கிடையே, செய்முறைத் தேர்வுகளை நடத்துவது குறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இன்று ஜனவரி 2ம் தேதி முதல்14ம் தேதிக்குள் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கான செயல்திட்டங்கள், அகமதிப்பீடுகள், ஆகியவற்றுக்கான மதிப்பெண்களையும் பள்ளிகள் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுகள் தொடர்பான தேதிகளை cbse.gov.in, cbse.nic.in போன்ற அதிகாரப்பூர்வ இணைய தளங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment