
TN TRB Annual Planner 2023: பள்ளி, கல்லூரி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் - முழு அட்டவணையை வெளியிட்ட டி.ஆர்.பி.; விவரம் 2023ஆம் ஆண்டுக்கான கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் மாதங்களும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அடங்கிய உத்தேசத் தேர்வு அட்டவணையை டிஆர்பி வெளியிட்டுள்ளது. குறிப்பாக உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் மாதங்களையும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையையும் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் 4 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ளது. உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு 2023 ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 23 காலி இ...