
Guest Lecturer Jobs: அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி- விவரம் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,895 இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (டிசம்பர் 27) கடைசித் தேதி ஆகும். தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியிடங்கள் தவிர, மீதி காலியாக உள்ள 1,895 பணியிடங்களுக்கு தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த காலிப் பணியிடங்களுக்கு கவுரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதி பெற்றுள்ள தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று, அதில் இருந்து கவுரவ விரிவுரையாளர்கள் ...