Posts

Showing posts from December 24, 2022
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்... முக்கிய அப்டேட்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜனவரி தொடக்கத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பரில் வெளியாகும் என்று தெரிவித்த நிலையில் தற்போது முடிவுகள் டிசம்பரில் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது. 7301 காலிப்பணியிடங்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தற்போதைய தகவல் படி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 4 தேர்வைத் தமிழ்நாடு முழுவதும் 18.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அதிகப்படியான தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையில் குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் குறிப்பிடப்படாத நிலையில் பணியிடங்கள் அதிகரித்தால் இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கே அதிக அளவில் வேலைவாய்ப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
Image
  ஜேஇஇ நுழைவுத் தேர்வு விண்ணப்பம்.. மதிப்பெண்களை குறிப்பிடுவதில் விலக்கு! ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் அளிக்கப்பட்டு மதிப்பெண்கள் அளிக்கப்படவில்லை. இதனால் ஜேஇஇ நுழைவு தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி), இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐ.ஐ.ஐ.டி) உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கும் தகுதி பெறுவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு வரும் கல்வியாண்டில் இரு முறை நடத்தப்படவுள்ளது. ஜனவரி 24ம் தேதி தொடங்கும் முதல் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த 15ம் தேதி முதல் ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் பல லட்சம் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.  ம