![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-fpCWkqSKFgbe1EppEh6xuoIkENqna_UjVVYY3g8NQd0AdkVWNAW79wmpzdAGlJFh1LBCtbivUULMLM1rgyJik5HAzqBKUotZuyFTE-Ee4rXdZ98Pepy5CctMXwAa8N5TpJo8A9YTHzIgAwp-pie62SiAvA_sWiZXwgS8XGzQS0A2OAlNqhp4lLhb/s320/n4068545641658572043212120d816a0a0ba07eeb59960fa92c2c6149e39a82d6dc88728f18981fc3012b7b.jpg)
ஓராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்ப திட்டமா?.. டிஎன்பிஎஸ்சி விளக்கம்..! அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிட்டதில். ஓராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படவுள்ளன என சமூக ஊடகங்களிலும் சில பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளது. ஊடகங்களில் வெளியான தகவல்கள் முழுமையாக இல்லாததால், தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் நிலையில், அவற்றை மறுத்து, பின்வரும் விவரங்கள் வெளியிடப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளிலிருந்து நேரடி நியமனத்திற்காக பெறப்படுகின்ற காலிப் பணியிடங்களுக்கான மதிப்பீடுகளின் அடிப்படையில், போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு வருகிறது. ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த அட்டவணை முதற்கட்டமாக தகவல்களை அளிக்கும் அட்டவணையாகும். இது தொடர்ந்து கூடுதல் பணியிடங்களுக்கான கேட்புகள் பெறப்படப்பட அட்டவணையில் ...