
தெற்கு ரயில்வே பணிகளில் 80% வட இந்தியர்கள்.! பாண்டேக்கள், சவுத்திரிகள், சவுகான்கள் நிரம்பியுள்ளனர் - அன்புமணி ரயில்வே பணியிடங்களில் 80 சதவகிதம் வட மாநிலத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதாற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு தொடர்வண்டித்துறையில் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் 80 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களை வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தேர்வாகி இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறார்களோ? என்ற ஐயத்தை இது எழுப்பியிருக்கிறது. தெற்கு ரயில்வேயில் 80% வட மாநிலத்தவர் தெற்கு தொடர்வண்டித்துறை, ஐ.சி.எஃப் எனப்படும் தொடர்வண்டி பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு கூட்ஸ் கார்டுகள், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், முதுநிலை வணிகம் மற்றும் பயணச்சீட...