
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க! (District Educational Officer job) தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பள்ளிக் கல்வித்துறை பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை (District Educational Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். காலியிடங்களின் எண்ணிக்கை: 11 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் B.T. o...