Posts

Showing posts from December 17, 2022
Image
  TNPSC 2022 Vs 2023 : பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதா? அட்டவணை நிலவரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெளியிட்டுள்ள அட்டவணையில் முக்கிய தேர்வுகளான குரூப் 1,2,3 தேர்வுகளுக்கான விவரங்கள் இடம்பெறவில்லை. 2022 ஆம் ஆண்டு அட்டவணை 32 பிரிவுகளில் 11,982 பணியிடங்கள் கொண்டு வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அட்டவணை 11 பிரிவுகளில் 1,754 பணியிடங்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது, மேலும் இந்தாண்டு அறிவிக்கப்பட்ட 12 பிரிவுகளின் பணியிடங்களுக்கு வரும் வருடம் தான் தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த விவரங்களும் தற்போதைய அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையில் குரூப் - 4 தேர்வுக்கான பணியிடங்கள் விவரங்கள் இடம்பெறவில்லை. ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிக்கு 828 பணியிடங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாலை ஆய்வாளர் பணிக்கு 762 பணியிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு 101 பணியிடங்கள் ஆகியவையே அதிக எண்ணிக்கையில் வெளியாகி உள்ளது. மேலும் பெரும்பாலான பணியிடங்களுக்கு 20...