
அதிருப்தி அளிக்கும் டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டம்.. அவுட்சோர்சிங் முறையை கொண்டுவர அரசு திட்டமா? அண்மையில் வெளியான 2023 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டத்தால் அதிருப்தி ஏற்பட்ட நிலையில், 'அவுட்சோர்சிங் முறை'யில் பணி நியமனம் செய்ய அரசாணை 115-ஐ செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதோ?என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commission - TNPSC) மூலம் நேற்று டிச.15 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட, வரும் 2023ஆம் ஆண்டு போட்டித் தேர்விற்கான அட்டவணையில் குறைந்த எண்ணிக்கையில் பணியிடங்கள் காண்பிக்கப்பட்டுள்ளதால்,அவுட்சோர்சிங் முறையில் (Outsourcing method) பணி நியமனத்திற்கு வெளியிடப்பட்ட அரசாணை 115-ஐ செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குரூப்-1 மற்றும் குரூப்-2 பணியிடங்களுக்கு 2022 ஆண்டிற்கான அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களுடன், 2023ஆம் ஆண்டில் முதன்மைத்தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சேர்க்கப்படும் என டிஎன...