.jpg)
2023ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் நியமனம் செய்யப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான போட்டித்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரியில் குரூப் 2 முதன்மைத் தேர்வும், நவம்பரில் குரூப் 4 தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை உள்ள 762 காலி பணியிடங்களை நிரப்ப ஜனவரி 23 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.