Posts

Showing posts from December 13, 2022
Image
  21-ம் தேதி டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு : வெளியானது முக்கிய அப்டேட் TNPSC Reporter Examination Hall ticket: தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள ஆங்கில மற்றும் தமிழ் நிருபர் பதவிக்கான அனுமதிச் சீட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுளளது. முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 6 ஆங்கில நிருபர் பதவிக்கும், 3 தமிழ் நிருபர் பதவிக்கும் டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்கை அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான, விண்ணப்பங்கள் அக்டோபர் மாதம் 12ம் தேதி வரை பெறப்பட்டன. கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். இரண்டு தாள்களைக் கொண்ட எழுத்துத் தேர்வு 21.12.2022 அன்று சென்னை தேர்வு மையத்தில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேளைகளில் நடைபெறும் என்றும் ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் தெரிவித்திருந்ததது. இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpsc exams.in ஆகிய இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம...
Image
  வேலைவாய்ப்பு செய்தி..!! இல்லம் தேடிக் கல்வி..!! பதிவு செய்வது எப்படி..? முழு விவரம் உள்ளே..!! கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்கீழ், பள்ளி நேரங்களுக்குப் பிறகு, தினசரி 1 முதல் 1.30 மணி நேரம் வரை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு கற்றல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், வாரத்திற்கு 6 மணி நேரம் கற்றல் அளிக்கும் முழு நேர ( Full time) தன்னார்வலராகவும், வாரத்திற்கு ஒருமுறை/இருவாரங்களுக்கு ஒருமுறை/மாதத்திற்கு ஒருமுறை கற்றல் அளிக்கும் பகுதி நேரத் தன்னார்வலராகவும் தொண்டு செய்யலாம். மேலும், நீங்கள் சொந்தக் காரணங்களுக்காக இல்லம் தேடிக் கல்வியில் இருந்து எளிமையான முறையில் விலகிக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.   அடிப்படைத் தகுதிகள் என்ன? மாணவர்/ அரசுப் பள்ளி மாணவர்/ தனியார் பணியாளர்கள்/சுய தொழில் முனைவோர்/ வேலை தேடுபவர்/ இல்லத்தரசி/ ஆசிரியர் சமூகம்/ ஓய்வு பெற்றோர் என பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கண்டி...