CBSE 10th 12th Exam: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் புதிய முறை: மத்திய அரசு அறிமுகம் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கேள்விகள் எப்படி கேட்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் மத்தியக் கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ அறிவித்தது. 2 பருவத் தேர்வுகள் புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெ
Posts
Showing posts from December 12, 2022
- Get link
- X
- Other Apps
புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்! மொத்தம் 165 காலி பணியிடங்கள் உள்ளது! புதுச்சேரி அரசின் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.கிளார்க் வேளையில் பணிபுரிய மொத்தம் 165 காலி பணியிடங்கள் உள்ளது.இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் தமிழ் ,ஆங்கிலம் ,தெலுங்கு ,மலையாளம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் இளநிலை தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதனையடுத்து ஸ்டோர் கீப்பராக பணிபுரிய மொத்தம் 55 காலி பணியிடங்கள் உள்ளது.இந்த பணியில் சேர விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 32 வயது நிறைந்திருக்க வேண்டும்.மேலும் இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்த்தலின் படியே தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களை https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில்
- Get link
- X
- Other Apps
குரூப் V-A எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு போட்டித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில், 'தலைமைச் செயலக பணி, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவி உள்ளிட்ட குரூப் V-A எழுத்துத் தேர்வு டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
TNSTC: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் Mechanical Engineering /Automobile Engineering ஆகிய பணிகளுக்கு உள்ள 346, Apprentice காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: விழுப்புரம் - 96 கும்பகோணம் -83 மதுரை - 26 சேலம் -29 திண்டுக்கல் - 23 தர்மபுரி - 23 விருதுநகர் - 22 சென்னை - 44 கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பள விவரம்: Graduate Apprentice பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.9000, Diploma Apprentice பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.8000/- வழங்கப்படும். தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கம் மூலம் 18.12.2022 தேதிக்குள் விண்ணப