முக்கிய அறிவிப்பு!! அனைத்து சனிக்கிழமைகளிலும் இனி வேலை நாள்!! மாண்டஸ் புயல் மற்றும் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. அக்டோபர் முதல் வாரத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு ஓரளவு மலைப்பொழிவு குறைந்த நிலையில் அடுத்தடுத்து புயல்கள் உருவானதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. அவ்வகையில் இந்த வருடம் புயல் மற்றும் கனமழை காரணமாக அதிகளவில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கிட்டத்தட்ட 20 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களாக விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனை ஈடு செய்ய இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posts
Showing posts from December 11, 2022
- Get link
- X
- Other Apps
தமிழக ரேசன் கடை வேலை; நேர்முகத் தேர்வுக்கு இந்த ஆவணங்கள் முக்கியம்! தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், நேர்முகத் தேர்விற்கு அவசியம் எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள் எவை என்பதை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையங்கள் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தநிலையில், நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு (Email ID) அனுப்பப்பட்டுள்ள பதிவெண் விவரங்கள் மூலம் நேர்முகத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வு மையம்...
- Get link
- X
- Other Apps
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - 346 காலிப்பணியிடங்கள்!! காலிப்பணியிடங்கள் : Apprentices,( Mechanical Engineering /Automobile Engineering) பணிக்கு என மொத்தம் 346 காலி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. *TNSTC Villupuram - 96 பணியிடங்கள் *TNSTC Kumbakonam -83 பணியிடங்கள் *TNSTC Madurai - 26 பணியிடங்கள் *TNSTC Selam -29 பணியிடங்கள் *TNSTC Dindigul - 23 பணியிடங்கள் *TNSTC Dharmapuri - 23 பணியிடங்கள் *TNSTC Virudhunagar - 22 பணியிடங்கள் *SETC Chennai - 44 பணியிடங்கள் கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் மற்றும் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும் . ஊதிய விவரம்: Graduate Apprentice பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ .9000/- வழங்கப்படும் . Diploma Apprentice பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ .8000/- வழங்கப்படும். தேர்வு முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Document Ve...