
பொறியியல் கல்லூரியில் எந்த ஆசிரியரும் தமிழ் கற்பிக்கலாமா? தமிழுக்கு செய்யும் மரியாதையா இது? ராமதாஸ் கேள்வி பொறியியல் கல்லூரியில் எந்த ஆசிரியரும் தமிழ்ப் பாடம் நடத்த அனுமதிக்கலாமா, இதுவா தமிழுக்கு செய்யும் மரியாதை என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ''தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட, தன்னாட்சி பெறாத, பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கான முதல் இரு பருவங்களில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். ஆனால், பொறியியல் கல்லூரிகளில் தமிழ்ப் பாடத்தை யார் வேண்டுமானாலும் நடத்த அண்ணா பல்கலை. அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழறிஞர்களும் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்று நடப்பாண்டு முதல் இளநிலை பொறியியல் படிப்பில் முதலாமாண்டின் முதல் பருவத்தில் தமிழர் மரபு என்ற பாடமும், இரண்டாவது பருவத்தில் தமிழரும் தொழில்நுட்பமும் என்ற பாடமும் நடப்பாண்டு ம...