Posts

Showing posts from December 8, 2022
Image
  உதவி பேராசிரியர் பணி நியமனம் டி.என்.பி.எஸ்.சி., நடத்த கோரிக்கை அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் நியமனத்துக்கான போட்டி தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பதில், டி.என்.பி.எஸ்.சி., வழியே நடத்த வேண்டும் என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர். இதுகுறித்து, &'நெட், செட்&' என்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலர் தங்க முனியாண்டி வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் பதவிக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் எழுத்து தேர்வு நடத்த முடிவெடுத்து உள்ளதை வரவேற்கிறோம். அதே நேரம், இந்த தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,க்கு பதில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வழியே நடத்த வேண்டும்.எழுத்துத் தேர்வில், 50 சதவீத விரிவான விடைக்கு பதில், 30 சதவீதமாக மாற்றி நடத்த வேண்டும்.  மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., தேர்வு போல், இந்த தேர்வை நடத்த வேண்டும். நேர்காணலை, வீடியோ பதிவு செய்ய வேண்டும்.அரசு கல்லுாரிகளில் புதிதாக, 1,895 கவுரவ விரிவுரையாளர்களை சொற்ப ஊதியத்தில் நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.  இது, யு.ஜி.சி., விதிகளை மீறிய செயல்.தற்போது,
Image
  வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை...! தமிழ்நாடு அரசு வெளியீடு..! தமிழ்நாடு முழுவதும் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போரின் பட்டியல் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். அது தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.  இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.  அதனடிப்படையில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 62 ஆயிரத்து 875 பேரும், அதேபோல் 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்.!! வெளியான பரபரப்பு தகவல்..!! 2022 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்று 4 மாதங்கள் மேல் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக, 7301 குரூப் 4 நிலை காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான, எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை 24ஆம் தேதி நடைபெற்றது. 16.2 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு என எதுவும் இல்லாமல் நேரடி நியமன எழுத்துத் தேர்வின் மூலமே இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, தேர்வர்கள் தங்களது உழைப்புகளை, திறமைகளை ஒட்டுமொத்தமாக இந்த தேர்வில் செலுத்தியிருக்கின்றனர். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்கள் அழைக்கப்படுவர். இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர்,
Image
ஆசிரியரே இல்லாத ஆதிதிராவிடர் பள்ளி: கல்வி கற்க முடியாமல் 104 மாணவ, மாணவிகள் அவதி காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஒரே வளாகத்தில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளியில் 104 மாணவ, மாணவிகளும், உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளையும் சேர்த்து 375-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தொடக்கப் பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், 3 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் எந்த ஆசிரியரும் இல்லை. இதனால் உயர்நிலைப் பள்ளி நிர்வாகமே தற்காலிக ஆசிரியரை நிமித்தும், விடுதி பொறுப்பாளரைக் கொண்டும் பள்ளியை நடத்தி வருவதாக இந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மொத்த மாணவர்கள் 104 பேரையும் ஒரே அறையில் வைத்து அவ்வப்போது பாடம் நடத்துவதாகவும் பெற்றோர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மேலும் முறையான சமையல் கூடம், சுற்றுச் சுவர் இல்லை. கழிவறையும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியர் அல்லாத பணியில் ஈடுபடும் ஊழியர்கள் யாரும் இல்லாததால் ஆசிரியர்க