TNTET Result Declared: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I முடிவுகள் வெளியீடு TNTET - Paper I Result Declared: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் தாள் தேர்வு கணினி வழித் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வில் 1,53,533 தேர்வர்கள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து, அக்டோபர் மாதம் 28ம் தேதி தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative key Answer) வெளிடயிடப்பட்டது. தற்காலிக விடைக்குறிப்பிற்கு 28.10.2022 முதல் 31.10.2022 பிற்பகல் 5.30 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபனைகளை (Objection) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குபின் பாட வல்லுநர்குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களது கணினி வழித் தேர்வ...
Posts
Showing posts from December 7, 2022