
டிஎன்பிஎஸ்சிக்கு புதிய தலைவா் யாா்? தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) புதிய தலைவா் யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) புதிய தலைவா் யாா் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே தலைவராக இருந்த க.பாலச்சந்திரன், ஓய்வு பெற்று 6 மாதங்களான நிலையில் புதிய தலைவா் இதுவரை நியமிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் உறுப்பினராக உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.முனியநாதனே, பணியாளா் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவராகவும் செயலாற்றி வருகிறாா். கடந்த ஜூன் 10-ஆம் தேதி முதல் அவா் பணியாளா் தேர்வாணையத்தின் தலைவராக உள்ளாா். 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், புதிய தலைவா் விரைவில் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக அரசுப் பணியாளா் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் பணியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லது ஓய்வு பெற்ற நிலையில் இருக்கக் கூடிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் யாரேனும் ஒருவா் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆண்டு திட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் சா...