கிராம உதவியாளர் எழுத்துத் தேர்வு கேள்விகள் கசிவு? தேர்வர்கள் அதிர்ச்சி கிராம உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள் கசிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 63 கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது. 10,000க்கும் மேற்பட்டவர்கள் நேற்று இந்த தேர்வை எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாகவே ஆங்கில மொழித் திறன் தொடர்பான கேள்விகள் கசிந்ததாக dtnext ஆங்கில நாளிதழ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கேள்விகளை தெரிந்து கொள்ள ரூ.10,000 வரை பேரம் பேசப்பட்டதாகவும், தேர்வுக்கு சில மணி நேரத்திற்கு முன்பாக கேள்விகள் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அதிகாரையைத் தொடர்பு கொண்டு விசாரிக்கையில், தெற்கு மதுரை தாலுகாவில் தேர்வெழுதிய நபர் மீது சந்தேகம் எழுந்ததால், அந்த தேர்வர்கவுக்கு மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், குற்றம் செய்தவர்கள் மீது தக்கப்படி உ...
Posts
Showing posts from December 5, 2022
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வர்களே.. மெயின் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வது எப்படி? தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதன்மை தேர்வுகள் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி காலை மற்றும் மதியம் என நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் டிசம்பர் 16ஆம் தேதி வரை தங்களின் சான்றிதழ்களை இ சேவை மையம் மூலமாக பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு ஹால் டிக்கெட் ஜனவரி மாதம் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அறிவிப்பை தேர்வுகள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெர...
- Get link
- X
- Other Apps
தமிழக கிராம உதவியாளர் தேர்வு; ரிசல்ட் எப்போது? கட் ஆஃப் எப்படி இருக்கும்? தமிழக கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது? கட் ஆஃப் எப்படி இருக்கும்? தேர்வு முடிவு எப்போது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு கிராம உதவியாளர் தேர்வு இன்று (டிசம்பர் 4) நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2748 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது. இந்த பதவிக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி தான் தகுதி என்பதால், எழுத்து தேர்வு மிகவும் எளிமையான வகையில் நடந்துள்ளது. அதாவது எழுத்து தேர்வு 1 மணி நேரம் நடைபெற்றது. இதில் முதல் அரைமணி நேரம், அறை கண்காணிப்பாளர்கள் ஒரு கட்டுரையை வாசிக்க, தேர்வர்கள் அதனை எழுத வேண்டும். அடுத்த அரை மணி நேரத்தில் ஆங்கில கட்டுரை வாசிக்கப்பட தேர்வர்கள் அதனை எழுத வேண்டும். இந்தத் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு எழுதப் படிக்க தெரிந்துள்ளதா என்பதை சோதிக்கும் தேர்வாக அமைந்துள்ளது. இந்த தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் 6 ஆம் தேதி அல்லது இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் எழுத்துப் பிழ...