Posts

Showing posts from December 4, 2022
Image
  TNPSC : இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வு முடிவுகள் வெளியீடு..! கட்ஆஃப் என்ன? தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பணிக்கு மொத்தமாக 50 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 07.05.2022 மற்றும் 08.05.2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது. மேலும் தேர்வில் தகுதியானவர்களுக்கு வாய்வழி தேர்வு 01.12.2022 மற்றும் 02.12.2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது. தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பணிக்கு 50 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 25.08.2021 ஆம் தேதியில் வெளியானது. இப்பணிக்கு ஆனலைனில் விண்ணப்பிக்க 24.09.2021 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த பணிகளுக்கு முதல் நிலை, முதன்மை மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில் 06.11.2021 ஆம் தேதியில் முதல் நிலை தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் முதன்மை தேர்வுக்குச் சென்றனர். அதனைத் தொடர்ந்து முதன்மை தேர்வு 07.05.2022 மற்றும் 08.05.2022 ஆம் தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் 467 பே...
Image
  காவலர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பதவிகளுக்கான 2022 ஆம் ஆண்டு நேரடிக்கு முதல் நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இப்பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பு ஜீன் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்து. இப்பணிகளுக்கு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது அந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. விடைக்குறிப்பு மற்றும் வினாக்களில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் டிச.,10-க்குள் தெரிவிக்கலாம். விடைக்குறிப்புகளை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
Image
  Guest Lecture Recruitment 2022 அரசு கலை, அறிவியல், மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கெளரவ விரிவுரையாளர் பணிக்கான தேர்வு. இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க தொடக்க நாள் : 05/12/2022 மேலும் விரிவான தகவல் தெரிந்து கொள்ள https://www.tngasa.in/guestlecture/