
குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுக்கான அசல் சான்றிதழ்களை பதிவு செய்ய இ-சேவை மையங்கள் திறப்பு..! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதன்மைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்வதற்கு ஏதுவாக இ-சேவை மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 21.05.2022 அன்று நடத்தப்பட்ட குரூப்-2 & 2ஏ முதல்நிலைத் தேர்வு (TNPSC GROUP II&IIA MAIN EXAMINAION) முடிவுகளின்படி முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை 17.11.2022 முதல் 16.12.2022 வரை இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில்கொண்டு, அனைத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன இ-சேவை மையங்களும் காலை 8 மணி...