அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணியிட அறிவிப்பாணையை ரத்து..!! கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்வதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்துள்ளது. தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு 4,000 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் பழைய அரசாணையை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Posts
Showing posts from December 2, 2022
- Get link
- X
- Other Apps
TANCET 2023 Exam: டான்செட் 2023 எம்.இ., எம்.பி.ஏ, எம்.சி.ஏ தேர்வுகள் திடீரென ஒத்திவைப்பு.. 2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. . தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான்., எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) எழுத வேண்டும். டான்செட் (TANCET - Tamil Nadu Common Entrance Test) தேர்வெழுதி, தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. இதற்கிடையே 2022ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மே 14ஆம் தேதி நடைபெற்றது. முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 அன்று நடைபெற்றது. இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கன டான்செட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எம்சி...
- Get link
- X
- Other Apps
12th முடித்தவர்களுக்கு.. புதுச்சேரி காவல்துறையில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!! புதுச்சேரி காவல்துறையில் காலியாகவுள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை பணிகளுக்கு விருப்பமுள்ள இளம் விண்ணப்பதார்கள் உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Puducherry Police Department பதவி பெயர்: Police Constable மொத்த காலியிடம்: 253 கல்வித்தகுதி: 12th வயதுவரம்பு: 18 - 24 Years கடைசி தேதி: 27.12.2022 கூடுதல் விவரம் அறிய: www.recruitment.py.gov.in https://recruitment.py.gov.in/recruitment/PC2022/notification
- Get link
- X
- Other Apps
Part Time Teachers: 10 ஆண்டுகளாகப் போராட்டம்; பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிரந்தரம் எப்போது?- அன்புமணி கேள்வி பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ''தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், அதே திட்டத்தில் பணியாற்றும் சிறப்பாசிரியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு மறுக்கப்பட்டிருக்கிறது. ஒரே துறையில் ஒரே திட்டத்தில் பணியாற்றுபவர்களில் ஒரு தரப்பினருக்கு ஊதிய உயர்வு வழங்கி விட்டு, அத்திட்டத்திற்கு அடித்தளமாக செயல்படும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை மறுப்பது நியாயமற்றது. தமிழக அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்....