Posts

Showing posts from December 1, 2022
Image
  ஊதியமும் இல்லை; விடுப்பும் எடுக்க முடியவில்லை: எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் வேதனை தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மாற்றுப்பணி மூலம் நிரந்தர இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தனர். இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களை மீண்டும் பள்ளிகளுக்கே மாற்றியதை அடுத்து, இந்த கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை மூடப் போவதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தொடர்ந்து எல்கேஜி, யுகேஜிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு பாடம் கற்பிக்க ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஊதியம் வழங்கப்படும். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த அக்டோபரில் நியமிக்கப்பட்ட அவர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப் படவில்லை. தற்காலிகமாக நியமிக்கப்படுவோருக்கு மாதம் ஒருநாள் சிறப்பு விடுப்பு தருவர். ஆனால் அதுவும் அறிவிக்கப்படாததால் அவர்க
Image
  பட்டதாரி ஆசிரியர்கள் பத்தலை; பாடங்களை முடிக்க முடியலை கோவை : உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதால், எட்டு பட்டதாரி ஆசிரியர்களாவது நியமித்தால் தான் சமாளிக்க முடியும் என, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர். கோவை மாவட்டத்தில், 83 அரசு மற்றும் 22 உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்பு கையாள, ஐந்து பட்டதாரி ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். பாடவாரியாக, ஐந்து பாடங்களுக்கு ஐந்து ஆசிரியர்கள் என கணக்கிட்டு, நியமனம் செய்யப்படுகிறது. மாணவர் எண்ணிக்கை அதிகரித்தாலும், கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. ஓய்வே இல்லாமல் கற்பித்தல் சிறப்பு ஆசிரியர்கள் இருக்கும் பட்சத்தில், அவர்களின் கல்வித்தகுதி பொறுத்து, கீழ்வகுப்புகளுக்கு பாடவேளைகள் ஒதுக்கப்படுகின்றன. இப்பணியிடமும் இல்லாத பள்ளிகளில், ஆசிரியர்கள் ஓய்வே இல்லாமல், கற்பிக்கும் நிலை நீடிக்கிறது. குறிப்பாக, பட்டதாரி ஆசிரியர்கள் வாரத்திற்கு, 28 வகுப்புகள் கையாள வேண்டும். இதன்படி கணக்கிட்டு தான், பாடவேளைகள் ஒதுக்கப்படும். போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், ஒருநாளைக்கு ஏழு ப
Image
  13,404 காலிப்பணியிடங்கள்: கேந்திர வித்யாலயாவின் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு முதுநிலை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கதன் விரைவில் ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட இருக்கிறது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 13,404 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி காலியிடங்கள் உதவி ஆணையர் 52 தலைமை ஆசிரியர் 239 துணை தலைமை ஆசிரிஅயர 203 முதுநிலை ஆசிரியர் 1409 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் 3176 தொடக்க கல்வி ஆசிரியர் 6414 தொடக்க கல்வி (இசை ) 303 Librarian நூலகர் 355 Finance Officer நிதி அலுவலர் 6 உதவி பொறியாளர் 2 உதவி செக்சன் அலுவலர் 156 சீனியர் செயலக உதவியாளர் 322 இளநிலை செயலக உதவியாளர் 702 இந்தி மொழிபெயர்ப்பாளர் 11 சுருக்கெழுத்தாளர் - 2நிலை 54 மொத்தம் 13,404 13,404 மொத்த பணியிடங்களில், ஆசிரியர் பணி நிலையின் கீழ் 11,747 இடங்களும், ஆசிரியர் நிலை இல்லாத பணி நிலையில் 1,657 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வரும் டிசம்பர
Image
  2000 அரசு பணியிடங்களில் விரைவில் நிரப்பப்படும்: புதுச்சேரி முதல்வர் உறுதி! புதுச்சேரியில் 2,000 அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் கூறியிருக்கிறார். புதுவையில் 2,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. அவை விரைந்து நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. மேலும் முதலமைச்சர் ரங்கசாமி அரசு முறை பயணமாக மாகி சென்று உள்ளார்.  அங்கு கூட்டுறவு சங்கத்தின் துணைப் பதிவாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார் தொடர்ந்து 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் குத்துவிளக்கு ஏற்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில் நான் கடந்த காலங்களில், முதலமைச்சர் ஆக இருந்த பொழுது மாதியை சேர்ந்த ஒருவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அவர் என்னுடன் ஒரு கருத்தோடு மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபட்டார். மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலும் அவரது பங்கு அதிகமாகவே இருந்தது.  சுகாதாரத் துறையில் அவர் நிறைய சென்று இருக்கிறார். கடந்த தேர்தலின் போது அவர் எண்ணார் காங்கிரஸ் வந்திரு