
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு மாற்றியமைப்பு.. காரணம் இதுதான் தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிந்த நிலையில் தற்போது நிர்வாக காரணங்களால் தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுளளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் நவம்பர் 7ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டன. பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 5ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய விரும்புவோரின் குறைந்தபட்ச வயது 21 ஆகவும், அதிகபட்ச வயது 34 ஆகவும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி, கணவரை இழந்த பெண்கள் உள்ளிட்டவர்கள் 37 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இந்த பதவிக்கு விண்ணப்பி...