
4,5 ஆம் வகுப்புகளில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாத நிலை - கல்வித் துறையின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் கொரோனா தொற்று காரணமாக 2020_2021,2021-2022 ஆம் கல்வி ஆண்டுகளில் நேரடி வகுப்புகள் என்பது இல்லாமல் இருந்தது. இதனால் பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வரும் சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய கல்வித் துறை திட்டமிட்டது. அதன்படி திறனாய்வு மதிப்பீட்டு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தேர்வு மாணவர்களின் கற்றல் திறனை சரி செய்ய உதவும் என்று சொல்லப்பட்டது. அந்த வகையில் இந்த மதிப்பீட்டு தேர்வு ஒன்னு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடந்தது. அதில் 4,5 ஆம் வகுப்பில் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் கணிசமானவர்கள் ஒன்றாம் வகுப்பு கற்றல் நிலையிலேயே இருப்பதும் குறிப்பாக இந்த மாணவர்கள் மொழிப்பாடத்தில் எழுத்துகளை அறியாததால் எழுத்துக் கூட்டி படித்து பொருள் அ...