Posts

Showing posts from November 23, 2022
Image
  29 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி: நவ. 26 வகுப்பு தொடக்கம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 414 மையங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நவம்பர் 26-ம் தேதி தொடங்கப்படுகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் மதிப்பெண் அவசியமாகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களே அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும். இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி பள்ளிக்கல்வித்துறை மூலம்வழங்கப்படுகிறது. ஒரு பிளாக்கிற்குஒரு மையம் என 414 மையங்கள் நீட் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன.  ஒரு நீட் பயிற்சி மையத்திற்கு 70 மாணவர்கள் என தமிழகம் முழுவதும் 29,000 மாணவர்களுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 11-ம் வகுப்பில் 20 பேரும், 12-ம் வகுப்பில் 50 பேரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தோறும் இப்பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் கூறியதாவது: நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வசதியாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.  சென்னையில் 10 மையங்கள...
Image
  கல்லூரிகளில் புதிதாக பயிற்சி பேராசிரியர் பணி: யுஜிசி அனுமதி  பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி பேராசிரியர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:  உயர்கல்வி நிறுவனங்களில் கல்விசார் துறைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த நிபுணர்களை பயிற்றுநர்களாக நியமிக்க வசதியாக ‘பயிற்சி பேராசிரியர்’ (Professor of Practice) என்ற புதிய பணியிடம் உருவாக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி பேராசிரியர்களை நியமிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி பயிற்சி பேராசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு பல்துறை கல்வியை கற்று தரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.