Posts

Showing posts from November 19, 2022
Image
  உளவியல் உதவி பேராசிரியர் பணிக்காக தேர்வு அறிவிப்பு மருத்துவ பணிகள் பிரிவில், உளவியல் உதவி பேராசிரியர் மற்றும் கலை, அறிவியல், கல்வியியல் கல்லுாரிகளில் நிதியாளர் பணிக்கான தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக மருத்துவ சேவை பணிகளில் அடங்கிய, உளவியல் மற்றும் மருத்துவ உளவியல் பிரிவு உதவி பேராசிரியர் பணியில், 24 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வில் பங்கேற்க, இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை; 60 வயது நிரம்பாமல் இருக்க வேண்டும். உளவியலில் எம்.ஏ., - பி.ஏ., - பி.எஸ்சி., ஹானர்ஸ் படிப்பில் ஏதாவது ஒன்று அல்லது கிளினிக்கல் சைக்காலஜி பிரிவில் முதுநிலை டிப்ளமா அல்லது டிப்ளமா படித்திருக்க வேண்டும். இந்த பதவிக்கான கணினி வழி போட்டி தேர்வு, மார்ச் 14ல் நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், டிச.,14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நிதியாளர் பணி அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், நிதியாளர் பணியில் ஐந்து காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வில்
Image
  சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறையில் பட்டப்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.  ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதிக்கு இருக்கும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 289 இடங்கள் இருக்கின்றன. அதில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் கீழ் 21 இடங்களும் மற்றவையில் 259 இடங்களும் உள்ளன. 6 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1660 இடங்கள் இருக்கின்றன. இதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாகி இடஒதுக்கீட்டிற்கு 425 இடங்கள், அரசு இடஒதுக்கீட்டிற்காக 822 மற்றும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 115 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் இடஒதுக்கீட்டிற்கான ஆலைகளை அமைச்சர் வழங்கினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேரவையில் அறிவித்தது போல தனியார் ந
Image
  இன்ஜி., துணை கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியீடு இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் முதலாம்ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு பொது கவுன்சிலிங் கடந்த வாரம் முடிந்தது. இதில் 93 ஆயிரம் மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மீதமுள்ள 60 ஆயிரம் இடங்களுக்கு துணை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. மொத்தம் 10 ஆயிரத்து 12 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். அவர்களில் 9731 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது. ஏதாவது ஆட்சேபனை இருந்தால் அதில் உள்ள குறைகளை தீர்க்க இன்று மாலை 5:00 மணி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. அதன்பின் நாளை துணை கவுன்சிலிங் துவங்க உள்ளது. வரும் 21ம் தேதி 'ஆன்லைன்' விருப்ப பதிவு முடிகிறது; அன்று இரவில் தற்காலிக இட ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும். அவற்றை 22ம் தேதி இரவு 7:00 மணிக்குள்மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். 23ம் தேதி இட ஒதுக்கீடுக்கான இறுதி உத்தரவுவழங்கப்படும். கூடுதல் விபர
Image
  731 கால்நடை மருத்துவர்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. டிசம்பர் 17ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள டிசம்பர் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். 2023 மார்ச் 15ம் தேதி காலை, மதியம் என இருவேளைகளிலும் கால்நடை மருத்துவர்களுக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
Image
  2.22 லட்சம் பேர் எழுதிய போலீஸ் எஸ்ஐ தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழகம் முழுவதும் 2.22 லட்சம் பேர் எழுதிய போலீஸ் எஸ்.ஐ.தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. 438 பேர் தேர்வாகியுள்ளனர். தமிழக காவல்துறையில் 444 எஸ்ஐ பதவிகள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவர் சீமா அகர்வால், ஐஜி செந்தில்குமாரி ஆகியோரது தலைமையில் எஸ்பிக்கள் விஜயகுமார், முத்தையா ஆகியோர் தேர்வுக்கான பணிகளை தொடங்கினர். கடந்த மார்ச் 8ம் தேதி இதற்கான அறிவிப்புகளை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுக்கு தமிழ் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் காவலர்களாக பணியாற்றிய 13,374 பேர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து எழுத்து தேர்வு ஜூன் 25, 26ல் நடந்தது. தமிழ் தகுதி தேர்வில் 40,313 பேரும், எழுத்து தேர்வில் நேரடியாக கலந்து கொண்டவர்களில் 37ஆயிரத்து 745 பேரும், காவலர்களாக உள்ள 10 ஆயிரத்து 887 பேரும் கலந்து கொள்ளவில்லை. ஒரு லட்சத்து 84 ஆயிரத