Posts

Showing posts from November 18, 2022
Image
  தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு... அமைச்சர் பொன்முடி தகவல்..!!!!! சேப்பாக்கத்தில்‌ உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு கூட்டத்தின் போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நிர்வாக ரீதியான சிக்கல்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங் களை நிரப்புதல் போன்ற பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 23 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 1,53,323 இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. இதில் தற்போது வரை 1,13,171 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களையும் நிரப...