4000 கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள்.. விரைவில் டிஆர்பி தேர்வு.. அமைச்சர் பொன்முடி அறிவிப்பு..!!!! தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் முதல் தாள் அதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக இரண்டாம் தாள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நான்காயிரம் கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்ய விரைவில் டிஆர்பி தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இது பற்றி பேசிய அவர், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியிடங்களில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,31,173 பேர் சேர்ந்துள்ளனர். தகுதி வாய்ந்த 1895 கௌரவ விரிவுரையாளர்களை தேர்வு மூலம் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்
Posts
Showing posts from November 16, 2022
- Get link
- X
- Other Apps
கல்வி பணிகளில் நிதியாளர் தேர்வுக்கு டிசம்பர் 10 வரை விண்ணப்பம் கல்வி பணிகளில் நிதியாளர் பதவிக்கான தேர்வுக்கு இணையதளம் வாயிலாக டிசம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு கல்வி பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவியில் காலியாக உள்ள 5 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு டிசம்பர் 10ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி விண்ணப்பத்தை டிசம்பர் 15ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் 17ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம். இப்பதவிக்கான கணினி வழித் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 10ம் தேதி நடைபெறும். காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு பொது நிர்வாகம்(முதுநிலை பட்டப்படிப்பு தரம்) அல்லது வணிக மேலாண்மை(முதுகலை பட்டப்படி தரம்) தேர்வும் நடைபெறும். பிற்பகல் கட்டாய மொழி தகுதி தேர்வு(10ம் வகுப்பு தரம்), பொது அறிவு(பட்டப்படிப்பு தரம்) தேர்வும் நடைபெறும். இவ்வாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.