Posts

Showing posts from November 6, 2022
Image
  இன்ஜினியரிங் படிப்பு துணை கலந்தாய்விற்கு 9-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் இன்ஜினியரிங் படிப்புக்கான பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 சுற்றுகளாக நடைபெறும் இந்த கலந்தாய்வு நடைமுறைகள் 10ம் தேதியுடன் முடிக்கப்பட்டு, 13ம் தேதி இறுதி ஆணை வழங்கப்பட உள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்கள், அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை இந்த துணை கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம்.  https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வாயிலாகவும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை உள்ளடக்கிய 110 இன்ஜினியரிங் சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாகவும் கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம். சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 12-ம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி படித்த, தக...
Image
2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைகிறது  Tn Village Assistant jobs Apply Online: தமிழகத்தின் அனைத்து மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிகள் சிறப்பு விதிகளின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது, முற்றிலும் அரசுப் பணியாகும். தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதிப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். யார் விண்ணப்பிக்கலாம்: இப்பணிக்கு, 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம். தமிழில், எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானத...
Image
  நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி எப்போது..?: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..! தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடப்பு ஆண்டுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நவம்பர் மூன்றாம் வாரம் முதல் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் ஒன்றியத்துக்கு ஒரு பயிற்சி மையம் என்ற அடிப்படையில் மொத்தம் 412 பயிற்சி மையங்களை ஏற்படுத்தி அதன் மூலம் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்குவது குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. அதில், போட்டித் தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 3-வது வார சனிக்கிழமையில் (நவ.19-ம் தேதி) இருந்து, ஒவ்வொரு வார சனிக்கிழமையும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற விரும்பும் 12-ம் வகுப்ப...
Image
  TNEA 2022: 4ம் கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவு: 54,000 இடங்கள் காலி! பொதுப் பிரிவு கலந்தாய்வு 4கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக துணை கலந்தாய்வு நடைபெறும். துணை கலந்தாய்விற்கு 10,000 பேர் வரை மாணவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வில் 4வது சுற்று முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் 54,000 பொறியியல் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10ம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கி 4 கட்டங்களாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. பொறியியல் படிப்பை பொறுத்தவரை 448 பொறியியல் கல்லூரிகளில் 1,39, 251 இடங்கள் உள்ளன. இவற்றுள் 85,216 இடங்கள் நிரம்பியுள்ளன.  54,035 இடங்கள் காலியாக இருக்கின்றன. கணினி அறிவியல்,தகவல் தொழில்நுட்பம் ,டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்துள்ளனர்.