
தட்டச்சு தேர்வு 'ஹால் டிக்கெட்' வௌியீடு தட்டச்சு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுதும் வணிகவியல் பயிலகங்கள் என்ற தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட தேர்வு முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நவ.,12, 13ம் தேதிகளில் புதிய முறையில் தட்டச்சு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க உள்ளவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. www.tndtegteonline.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.