ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடக்கிறது.. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2, டிசம்பர் மாதத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் டிசம்பர் மாதம் தேர்வு நடத்துவற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரிய இடைநிலை ஆசிரியர்கள் தாள் 1 ல், பட்டதாரி ஆசிரியர்கள் தாள் 2 ஆகியவற்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 எழுதவதற்கு விரும்பும் தேர்வர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 எழுதுவதற்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுக்கு அக்டோபர் 14 ந் தேதி முதல் 20 ந் தேதி வரையில் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான விடைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து ஆயிரத்து 885 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களு...
Posts
Showing posts from November 3, 2022
- Get link
- X
- Other Apps
பாலிடெக்னிக் கல்லுாரி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுஅறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக உயர்கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்று செயல்படும், 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த மாணவர்களுக்கு, ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டுக்கான முதல் செமஸ்டர் தேர்வு, நவ.25ல் துவங்க உள்ளது. பல்வேறு பாட வாரியாக தினமும் தேர்வுகள்திட்டமிடப்பட்டு உள்ளது. செய்முறை தேர்வுகள், டிச.,13ல் நடத்தப்படும். டிச.,17ல் தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட உள்ளது. பின், ஜனவரி 2ல்,மீண்டும் கல்லுாரிகள் திறக்கப்படும் என,அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கான விரிவான அட்டவணை, வரும் 11ம் தேதி வெளியிடப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 6000 காலிப்பணியிடங்கள்.. எந்த மாவட்டத்தில் எவ்வளவு..? இதோ மொத்த லிஸ்ட்..!!!! தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000 மேற்பட்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். தமிழ் மொழியில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://www.drbcbe.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14, 2022. பணியிட விவரங்கள்: கோயம்புத்தூர் 233, விழுப்புரம் - 244 , விருதுநகர் - 164, புதுக்கோட்டை - 135, நாமக்கல் - 200, செங்கல்பட்டு - 178, ஈரோடு - 243, திருச்சி - 231, மதுரை - 164, ராணிப்பேட்டை - 118, திருவண்ணாமலை - 376, அரியலூர் - 75, தென்காசி - 83, திருநெல்வேலி - 98, சேலம் - 276, கரூர் - 90, தேனி - 85, சிவகங்கை - 103, தஞ்சாவூர் - 200, ராமநாதபுரம் - 114, பெரம்...