
இல்லம் தேடி கல்வி திட்டம் தொடருமா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பரபரப்பு தகவல்..! திருச்சி மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து நிறைய நிதியை தமிழக முதல்வர் ஒதுக்கி உள்ளார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நவம்பர் 4ஆம் தேதி திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்தும் மற்றும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் குறித்தும்ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்;- கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்கூடத்தை எப்படி திறப்பது? எப்படி எல்லாம் பாடத்தை நடத்தி முடிப்பது என்று யோசித்தபோது பள்ளிக்கூடத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திறங்கள். ஆனால், இரண்டு வருடம் குழந்தைகளுக்கு படிப்பு இடைவேளை விட்டு விடக்கூடாது என்று ஆலோசனை...