Posts

Showing posts from October 27, 2022
Image
  பள்ளி கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் 3 மாதத்திற்குள் நிரப்பப்படும்... அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி!! தமிழகத்தில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் 3 மாதத்திற்குள் படிப்படியாக நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள மாவனல்லா, கூடலூர் பகுதிகளில் உள்ள அரசு உண்டு உறை விட பள்ளி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீடீர் ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை பிரிக்ஸ் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.  மிகவும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் பொது பணித்துறை மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித்துறைக்கு 7000...
Image
  PGTRB பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம் PGTRB பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அடுத்து வரக்கூடிய தேர்விற்கு Syllabus மாற்றம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் 14.11.2022 ல் நடைபெற உள்ளது.  இதில் பாடத்திட்டத்தை முற்றிலும் புதிய வடிவில் உருவாக்க திட்டமிடபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகப்படியான அலகுகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும் பழைய கருத்துக்கள் நீக்கம் செய்யப்பட்டு  நடைமுறையில் உள்ள புதிய கருத்துக்களை இணைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
Image
  டிஎன்பிஎஸ்சி அறிவித்த புதிய வேலைவாய்ப்பு.. எப்போது ..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே நிறுவனம்: மீன்வளத்துறை காலி பணியிடங்கள்: 88 பணியின் பெயர்: ஆய்வாளர், துணை ஆய்வாளர் பணியின் விவரம்:  ஆய்வாளர் - 64 துணை ஆய்வாளர் - 24 விண்ணப்பிக்க வேண்டிய தேதி:  இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர பதிவுக்கட்டணம் ரூ.150 ஆக செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் ரூ.100 ஆக செலுத்த வேண்டும். வயது வரம்பு:  விண்ணப்பதாரர்களுக்கு வயது 32க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் படி வயது வரம்பிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதி:  ஆய்வாளர்: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் மீன்வள அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விலங்கியல், உயிரியல், கடலோர மீன்வளர்ப்பு, கடலியல் பிரிவில் முதுகலை பட்டம் முடி...
Image
  நவ 12, 13ம் தேதிகளில் தட்டச்சுத்தேர்வு - தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்ககம் அறிவிப்பு.. நவம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. தட்டச்சு தேர்வு நடத்துவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை முதலில் விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பழைய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்த உத்தரவிட்டார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து திருச்சியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், புதிய முறைப்படி தட்டச்சு தேர்வினை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே 2021-ல் புதிய முறைப்படி நடத்தப்பட்ட தட்டச்சு தேர்வில் 85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், புதிய முறைப்படி தட்டச்சு தேர்வினை வருகிற நவம்பர் 13-ந் தேதிக்குள் நடத்த வேண்டும் என அரசு தொழில்நுட்ப கல்வித்துறை இயக்ககத்திற்கு உத்தரவிட்டிருந்தார்....
Image
  ஜெ. பழி வாங்கினார் முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றுவாரா???  டெட் கட்டாயம் என்று யார் அறிவித்தது NCTE தானே அதே NCTE clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் எழுத தேவை இல்லை என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள். இதை மட்டும் எதற்கு அப்போதைய அதிமுக அரசு ஏற்று கொள்ள வில்லை. NCTE டெட் வெற்றி பெற்றால் 7 ஆண்டுகள் வரை சான்றிதழ் செல்லும் என்று அறிவித்து அதை ஆயுட்காலமாக மாற்றும் போது அதிமுக அரசு ஏற்று கொண்டு உள்ளது. ஆனால் NCTE cluase v மட்டும் ஏற்று கொள்ள மாட்டார்கள் ஏன்? எதற்கு? கலைஞர் ஆட்சி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என்று அரசியல் பழி வாங்கும் நோக்கோடு செயல்பட்டது. 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நிலுவையில் உள்ள காலி பணியிடம் நிரப்பும் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எங்களுக்கு 9176 காலி பணியிடம் நிலுவையில் உள்ளது அதை நிரப்ப வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தோம் அவர்கள் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் அ...