Posts

Showing posts from October 26, 2022
Image
  ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! டெட் (TET) எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் விரைவில் நடைபெற உள்ளது. இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், டெட் (TET) எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறந்த கல்வியை வழங்க தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தான் முடியும். சிறந்த கல்வியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்கமுடியாது. எனவும் அறிறிவுறுத்தியது சென்னை உயர்நீதிமன்றம்.
Image
  10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு.. அசல் மதிப்பெண் சான்றிதழ்... வெளியான முக்கிய அறிவிப்பு..!!!! தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வுகள் நடந்து முடிந்தன. அதன்பிறகு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை அதாவது மதிப்பெண் பட்டியல்களை அக்டோபர் 31ஆம் தேதி முதல் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Image
  ஆசிரியர் பயிற்சித் தேர்வு விடைத்தாள் நகல் இணையத்தில் பெறலாம் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் தங்களின் விடைத்தாள் நகலை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் படித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள் இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்த பிறகு மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணை தள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதை பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டு கட்டணத் தொகையை கீழ்க் குறிப்பிட்டுள்ள நாட்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்த வேண்டும்.இதற்கான விண்ணப்பங்களை 27ம் தேதி மற்றும் 28ம் தேதிகளில் அனுப்ப வே...