
தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு தமிழகம் முழுவதும் 1990-91ம் ஆண்டு மற்றும் 2002-2003ம் ஆண்டு முதல் 2006-2007ம் கல்வி ஆண்டு வரை 45 பள்ளிகளுக்கு 45 முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களும், 45 முதுநிலை பொருளாதார ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். மேலும் 2011-2012ம் கல்வி ஆண்டில் 100 நகராட்சி, மாநகராட்சி, அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என 9 பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து 2014-2015ம் கல்வி ஆண்டிலும் இதேபோல் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மேலும் 2018-2019ம் கல்வி ஆண்டில் 5 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் அதன் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிலை உயர்த்தப்பட்ட...