
குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் ஒரு வார காலத்திற்குள் வெளியாகும்! டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வை கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதிலும் இருந்து 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 போ எழுதினர். இதே போல், 7,138 குரூப் 4 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. குரூப் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்து. ஆனால் தேர்வு முடிவுகள் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த சூழலில், குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், ...