TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வர்களின் விடைத்தாள்கள் வெளியீடு; எப்படி செக் செய்வது?- முழு விவரம் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி தேர்வர்கள் தங்களின் வினாத் தாள்கள் மற்றும் விடைகளைப் பார்ப்பது எப்படி என்பது குறித்துக் காணலாம். அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். ஏற்கெனவே ஒத்தி வைப்பு தாள் 1-ற்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தத் தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அ...
Posts
Showing posts from October 21, 2022
- Get link
- X
- Other Apps
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சி.டி.இ.டி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டுக்கான கணினித் தேர்வு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளது. தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் தேர்வுக்கான சரியான தேதி குறிப்பிடப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 24 ஆம் தேதி என்று தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் மட்டும் எழுதினால் போதுமானது. எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டு தாள்களும் எழுத வேண்டு...
- Get link
- X
- Other Apps
''டெட்' தேர்வு முதல் தாள் நிறைவு.இரண்டாம் தாள் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின், முதல் தாள் தேர்வு நிறைவு பெற்றது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிய, 'டெட்' என்ற தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில், பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு, டெட் முதல் தாள் தேர்வு, கடந்த 14ம் தேதி துவங்கியது; நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வுக்கு, 2.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 80 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். இந்த தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்பட்டது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆன்லைனில் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு, தேர்வர்கள் தயார் செய்யப்பட்டனர். தேர்வில் இடம் பெற்ற வினாத்தாள் சில பிரிவுகளில் எளிமையாகவும், சில பிரிவுகளில் கடினமாகவும் இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். டெட் இரண்டாம் தாள் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.