Posts

Showing posts from October 19, 2022
Image
  மிக அவரசம்.. மாணவர்கள் மற்றும் ஆசிரியர் விவரங்கள் தேவை - ஆதிதிராவிடர் நலத்துறைக்கு பறந்த கடிதம்.. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் விவரங்களை அனுப்புமாறு , அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணக்கர்கள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மற்றும் 9 முதல் 10-ம் வகுப்பு வரை எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட பாட வாரியான பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, தற்போது பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் பாட வாரியான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.   18.10.2022 அன்றைய நிலையிலான பாடவாரியான காலிப்பணியிட விவரங்கள் தங்களது G-Mail முகவரிக்கு Google Form தயார் செய்து அனுப்பப்பட்டுள்ள அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபாடு இல்லாமல் முழுமையாக பூர்த்தி செய்து 20
Image
  15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தரமான கல்வியை நமது அரசு பள்ளிகள் வழங்கிவருவதால் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளதாக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து சட்ட மன்றத்தில் முதல்வர் பேசியதாவது: கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளி கல்வித்துறையானது மகத்தான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக  திகழும் வண்ணம் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், மாதிரிப்பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என நமது அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில் பள்ளிக்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கு என அரசு பள்ளிகளுக்கு சுமார் 26,000 புதிய வகுப்பறைகளும், 7,500 கி.மீ. சுற்று சுவரும், பராமரிப்பு பணிகளுக்கு என சுமார் ரூ.2,500 கோடி நிதியும் என மொத்தம் சுமார் 12,300 கோடி தேவை என கண்டறியப்பட்டு அவற்றை படிப்படியாக ஏற்படுத்தி பெறுவதற்கு என பேராசிர
  தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிதாக 7,200 வகுப்பறைகள் கட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிதாக 7,200 வகுப்பறைகள் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நடப்பாண்டில் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
Image
 டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவு; உத்தேச அறிக்கை வெளியீடு  : டி.என்.பி.எஸ்.சி., நடத்தியுள்ள, 12 வகை தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என, உத்தேச அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளின் முடிவுகள், எப்போது வெளியிடப்படும் என்ற உத்தேச அறிக்கை, ஒவ்வொரு மாதமும், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த வகையில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தியுள்ள, 12 வகை போட்டி தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற உத்தேச விபரம், நேற்று வெளியிடப்பட்டது.  இதன்படி, குரூப் - 2 முதல் நிலை தகுதி தேர்வு முடிவு இந்த மாதமும், குரூப் - 4 தேர்வு முடிவு டிசம்பரிலும் வெளியிடப்படும்.  உதவி குற்றவியல் வழக்கறிஞர் பதவிக்கான தேர்வு, இன்ஜினியரிங் பதவிகளுக்கான தேர்வு ஆகியவற்றின் முடிவுகள், இந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.