
ஆசிரியர் பயிற்சி தேர்வில் 10 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி தேர்வில் 10 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இருந்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வினை முதலாம் ஆண்டில் எழுதிய 128 பேரில் 20 மாணவர்களும், 2ஆம் ஆண்டில் 196 மாணவர்களில் 22 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 10 சதவீதம் மட்டுமே தேர்ச்சி என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயார் செய்து வழங்கி வருகிறது. பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சியும் அளித்து வருகிறது. ஆனால் இந்த நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்த மாணவர்கள் செப்டம்பர் மாதம் நடைபெற்றத் தேர்வில் முதலாம் ஆண்டில் 20 பேரும், 2ஆம் ...