
தமிழகத்திலும் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்: ராமதாஸ் ஒடிசாவை போன்று தமிழகத்திலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஒடிசாவை போன்று தமிழகத்திலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசா மாநிலத்தின் அரசுத் துறைகளில் ஒப்பந்த பணி முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது; தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வந்த 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா மாநில அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும். இதன்மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் கடைபிடிப்பதற்கான முன்னுதாரணத்தை ஒடிசா உருவாக்கியுள்ளது. ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் ஒடிசா மாநில அரசுத் துறைகளில் 2013-ஆம் ஆண்டு முதல் பல்வேறு கால கட்டங்களி...