.webp)
விழுப்புரம் வட்டத்தில் உள்ள 7 கிராம உதவியாளர் களுக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் தகவல். தமிழக முழுவதும் கிராம உதவியாளர்களுக்கான 2748 காலிப் பணியிடங்கள் உள்ளன. இப் பணிக்குநேற்று முதல் விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ வருவாய்த்துறை இணையதளம் விண்ணப்பிக்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் வட்டத்தில் 7 கிராம உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது எனவும் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியுள்ளதாவது:- விழுப்புரம் வட்டத்தில் 7 கிராமத்தில் கிராம உதவியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியினை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 1.விழுப்புரம் வட்டத்தில் அற்பிச்சப் பாளையம் கிராமத்தில் உள்ள கிராம உதவியாளர்பணியிடத்திற்கு பொதுப் பிரிவு பெண்கள் விண்ணப்பிக்கலாம் (முன்னுரிமைற்றது) 2.ஆழியூர் உள்ள ஒரு காலி பணியிடத்திற்கு எஸ்.சி.பொதுப் பிரிவினர் விண்ண...