Posts

Showing posts from October 12, 2022
Image
  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிதாக 4000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் போராடிவரும் கௌரவ விரிவுரையாளர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்ய கல்லூரி கல்வி இயக்குநர் அதிரடியாக உத்தரவிட்டு இருப்பதாக செய்தி வெளியான நிலையில், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். அரசாணை எண் 56-ஐ பயன்படுத்தி கௌரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும், கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் எழுத்து தேர்வு முறையை கைவிட்டு, நேர்காணல் முறையையே தொடர்ந்து பின்பற்ற வேண்டும், சட்டக்கல்லூரிகளில் 30,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதைப் போல தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாநில தகுதித் தேர்வு உடனடியாக நடத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, போராட்டத்தை கைவிடாத கௌரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்றும் கௌரவ விரிவுரையாளர்களை போராட்டத்தை கைவிட கல்லூரிகளில் முதல்வர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் நீக்கம் செய்யப்படும் பணிகளில் உடனடியாக யுஜிசி விதி...
Image
  2,748 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது...    வி ண்ணப்பிப்பது எப்படி? கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காலியிடங்கள்: தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுளளது. அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 07ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். அடிப்படைத் தகுதிகள்: 21 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். 01-07-2022 தேதிக்கு முன்பாக 5ம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்; காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமத்தையோ அல்லது அதனைச் சுற்றியுள்ள குக்கிராமத்தையே சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு செய்திருப்பது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்படலாம். விண்ணப்பம் செய்வது எப்படி?  Online Application for the Post of Village Assistant என்ற இணையதளத்திற்கு செல்லவும் விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தகவல்களையும் சமர்ப்பிக...
Image
  சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு சென்னை மாவட்ட வருவாய் வட்டத்தில் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட வருவாய் அலகில் 9 வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலமுறை ஊதியம் அடிப்படையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்றிட கடைசி தேதி அடுத்த மாதம் 7ம் தேதி ஆகும். மனுதாரர் விண்ணப்பிக்க வயது வரம்பு 30.9.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும்.  மனுதாரர் விண்ணப்பிக்கும் வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் ...
Image
  மருத்துவத்துறையில் 1,021 காலிப்பணியிடங்கள் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (பொது) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்(MRB) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அந்த வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : மொத்தம் 1,021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கான ஊதியம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500. ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் http://www.mrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.  இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 25. விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.1000, இதர விரிவினருக்கு ரூ.500. எழுத்து அல்லது கணினி அடிப்படையிலான தேர்வு அடுத்த மாதம் நடைபெறும். வயது, கல்வித்தகுதி, பிற முக்கிய அறிவுறுத்தல்களை தெரிந்துகொள்ள www.mrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை காணலாம்.
Image
  அக்- 13ல் நடைபெறும் யுஜிசி, நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. இன்று முதல் பதவிறக்கம் செய்யலாம் . அக்டோபர் 13 அன்று நடைபெற உள்ள யுஜிசி, நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுஜிசி நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் 2022 தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. அதை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெற மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை( junior research fellowship -JRF) பெறுவதற்கு நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனபது கட்டாயம். எனவே இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இத்தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. இந்நிலையில் 2020 மற்றம் 2021 ஆண்டுக்கான தேர்வுகள் கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. எனவே அத்தேர்வுகள் தற்போது சுழற்சி முறையில் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் 13-ம் தேதி இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக...