சுகாதாரத்துறை பணியிடம் - தமிழ் தேர்வு கட்டாயம் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என அறிவிப்பு. தமிழக சுகாதாரத்துறை சார்பில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிட தேர்வுக்கு தமிழ் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1,021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ் தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் எனவும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மருத்துவ பாட திட்டத்தை தொடர்ந்து தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்றும் வரும் 25-ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம், நவம்பர் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் எனவும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Posts
Showing posts from October 11, 2022
- Get link
- X
- Other Apps
போராடிய கௌரவ விரிவுரையாளர்கள் பணிநீக்கம் - தமிழக அரசு தரப்பில் உத்தரவு! தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் 4083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலை.களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் 1500 கவுரவ விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ரூ.10,000 ஊதியத்தில் பத்தாண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த அவர்களுக்கு படிப்படியாக ஊதியம் உயர்த்தப்பட்டு, நடப்பாண்டு முதல் தான் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதில், பெரும்பான்மையினர் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருபவர்கள். தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனாலும், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வருவதில்லை என்று, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பலமுறை அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நிலையில், கவுரவ விரிவுரையாளர்கள், தங்களின் கோரிக்கைகளுக்காக சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரைய...
- Get link
- X
- Other Apps
தமிழக அரசில் 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள்; குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு தமிழக அரசின் வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 2748 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள் தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இதற்கான விளம்பரம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடப்பட வேண்டும். விண்ணப்பங்களை நவம்பர் 7 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலனை நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 30 ஆம் தேதியும், நேர்காணல் டிசம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிராம உதவியாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 2748 கல்வித் தகுதி : குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு தேர்ச்சியும், தமிழில் எழுத, படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்....
- Get link
- X
- Other Apps
ஒன்றல்ல, இரண்டல்ல.. 4000 காலியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்..! தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை கிண்டியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களுக்கான 4000 இடங்களை நிரப்பப் போகிறோம். மொத்த காலிப் பணியிடங்கள் 6906 உள்ளன. இதில் 4000 இடங்களை நிரப்பப் போகிறோம். இந்தப் பணியிடங்களுக்கும் டிஆர்பி மூலமாக எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். கவுரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து நேர்முகத் தேர்வில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வில் மொத்தமே 30 மதிப்பெண்கள்தான். இதில், ஓர் ஆண்டு கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண்கள் வீதம், 7.5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களுக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். எனவே, கவுரவ விரிவுரையாளர்கள் எழுத்துத் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு, தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்காக ...
- Get link
- X
- Other Apps
டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அப்டேட்! கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, இந்த புதிய முறையைப் பின்பற்றி குரூப் 2/2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இடஒதுக்கீட்டில் என்ன மாற்றம்? தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 30% இட ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 100 இடங்கள் நிரப்பப்படும்போது, பொதுப்போட்டிப் பிரிவு மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவுகள் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும்; மீதமுள்ள 70% இடங்களில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் போட்டியிட முடியும். மகளிருக்கு முதலில் 30% இடங்களை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 70% இடங்களிலும் போட்டியிட அவர்களை அனுமதிப்பது ஆண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மகளிருக்...
- Get link
- X
- Other Apps
TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு தயாராகிறீர்களா. முதன்மைத் தேர்வுத இப்படி தான் இருக்கும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 2 பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் இறுதிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதனிலை தேர்வு முடிவுகள் வரும் தேதியில் இருந்து குறைந்தது 3 மாதத்திற்குள் அதன் முதன்மைத் தேர்வு வந்து விடும். இன்று வரை ஏதும் தயார் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை இப்போதிருந்து ஆரம்பியுங்கள். முதன்மை தேர்வின் பேட்டன் என சொல்லப்படும் வரைமுறைகளை முதலில் தெரிந்து தெளிவாக்கிக் கொள்ளுங்கள். முதன்மைத் தேர்வு 2 தாள்களாக நடக்கும். தாள் 1: கட்டாயத் தமிழ் மொழிபெயர்த்தல் : (i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல் (ii) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் சுருக்கி வரைதல் பொருள் உணர்திறன் சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் கட்டுரை வரைதல் : திருக்குறள் தொடர்பாக கடிதம் வரைதல் (அலுவலகம் சார்ந்தது) தமிழ் மொழி அறிவு ஆகியவை அடங்கும் அடங்கும இந்த தாள் 100 மதிப்பெண் கொண்டது. 3 மணி நேரம் வழங்கப்படும். இந்த தாளில் குறைந்தது 40 மதி...
- Get link
- X
- Other Apps
அதிரடி மாற்றம்..! TNPSC எழுத்துத் தேர்வு. மையங்கள் குறித்து புதிய அறிவிப்பு..! TNPSC எழுத்துத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் தற்போது சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக அலுவலர் பதவிகளுக்கான கம்ப்யூட்டர் வழித் தேர்வு நவம்பர் 12, 13 தேதிகளில் 6 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த எழுத்துத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் தற்போது சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
TRB: இவர்கள் எல்லாம் தேர்வு எழுத முடியாது.! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.! ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 39 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது அறிவிப்பில்; பாலிடெக்னிக் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பித்த 4 பேரின் விண்ணப்பங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புகைப்படம், கையெழுத்து சரியாக இல்லாத 12 பேரின் விண்ணப்பமும், தேர்வர்களின் பெயர்களை சரியாக பூர்த்திச் செய்யாத 23 பேர் என 39 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 கம்ப்யூட்டர் மூலம் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை பதிவிறக்கம் செய்யாதவர்கள் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.