10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.14 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 14ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி நிறைவுபெற்று, தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியானது. 2,25,534 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காதிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர்களுக்கான துணைத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் வெளியானது. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பள்ளிகள் வாயிலாக மாணவர்கள் பெற்று, மேற்படிப்புகளில் சேர அவற்றைப் பயன்படுத்தினர். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, வரும் அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக்க...
Posts
Showing posts from October 10, 2022
- Get link
- X
- Other Apps
LKG, UKG சிறப்பாசிரியர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களே பொருத்தமானவர்கள் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எந்த அரசியல் அமைப்பினருக்கும் பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என அமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார். எந்த அரசியல் அமைப்பினருக்கும் பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. பள்ளி வளாகங்களில் கூட்டம் நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். பள்ளியை சுத்தம் செய்யவதாக பள்ளி நிர்வாகத்திடம் கூறிவிட்டு முன்னறிவிப்பின்றி ஆர்எஸ்எஸ் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். பள்ளிகளில் Right, Left உள்ளிட்ட எந்த இரு கருத்தியலும் நுழையக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கல்வி தொலைக்காட்சிக்கு சாதனைகளை குறிப்பிட்ட நிறுவனத்திடம் வாங்க டெண்டர் விடப்பட்டதாக எழுந்த புகாரில் உண்மையில்லை. கல்வித்தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கும் ஒப்பந்தப் புள்ளியில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருந்த...
- Get link
- X
- Other Apps
SSC CGL: 20 ஆயிரம் பணியிடங்கள்; கால அவகாசத்தை நீட்டித்த எஸ்.எஸ்.சி.! கவலையில்லாமல் விண்ணப்பிக்கலாம். பலரும் எதிர்பார்த்து காத்திருந்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சி.ஜி.எல். (Combined Graduated Level Examination ) பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகி அதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.10.2022 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. வலைதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் விண்ணப்பிக்காதவர்கள் கவலைபட வேண்டாம். இன்னும் மூன்று நாட்கள் நேரம் இருக்கிறது. மறக்காம விண்ணப்பித்துவிடுங்கள். பணி குறித்த கூடுதல் விவரங்கள்: பதவியின் பெயர்: Combined Graduate Level Service காலி இடங்கள்- தோராயமாக 20,000 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு* கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்Microsoft Word - Final_Notice_CGLE_2022_17_09_2022.docx (ssc.nic.in) விண்ணப்பிக்க கடைசி தேதி...
- Get link
- X
- Other Apps
தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு..? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்..!! தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்படுமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் DPI வளாகத்தில் 61 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பதவி உயர்வு ஆணையை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "மழைக்காலத்துக்கு முன்னரே இடியும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள கோப்புகள், வருகைப் பதிவேடு விவரங்கள் போன்றவற்றை உயரமான, பாதுகாப்பான இடங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளிகள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாதனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. LKG, UKG தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதி...