Posts

Showing posts from October 9, 2022
Image
  மருத்துவ படிப்புக்கு36,100 பேர் பதிவு எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 2022 - 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, www.tnhealth.tn.gov.in , www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் செப்., 12ல் துவங்கியது. நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். விண்ணப்பப் பதிவு அவகாசம், நேற்று மாலையுடன் முடிந்தது.  இந்நிலையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 13 ஆயிரத்து 457 பேர் உட்பட, மொத்தம் 36 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பங்கள் பரிசீலனை, இன்று துவங்குகிறது. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Image
  பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு புதிய தேர்வு மைய பட்டியல் தயாரிக்க உத்தரவு நடப்பு கல்வியாண்டில் (2022-23) 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடத்தப்படவுள்ளது. இதற்காக புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்துருகளை அனுப்ப வேண்டும். தங்கள் மாவட்டத்தில் 10 கி.மீ தூரம் வரை சென்று தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, அவர்கள் பயிலும் பள்ளியிலேயே தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், தேர்வு மையம் தேவை என்பதற்கான காரணத்தை பள்ளிகளும் பதிவு செய்ய வேண்டும். மேலும், பள்ளிகள் வழங்கும் கருத்துகளை தேர்வுத் துறைக்கு வழங்குவதுடன், இதற்கான அறிக்கையை அக்டோபர் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Image
  புதிய கல்விக் கொள்கையை சத்தமின்றி நடைமுறைப் படுத்துகிறதா தமிழக கல்வித்துறை?! இந்தியாவில் 34 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட `தேசிய கல்விக் கொள்கை 1986'-க்கு மாற்றாக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு புதிய தேசிய கல்விக் கொள்கை- 2020-ஐ உருவாக்கியது. இந்தக் கல்விக் கொள்கையின் வரைவு வெளியானபோதே, தமிழ்நாட்டிலிருந்து மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மேலும், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன. பிரதமர் மோடி முதல் ஆளுநர் ஆர்.என்.ரவி வரை எல்லா மேடைகளிலும் ஆதரவாகவும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதல் தி.மு.க கூட்டணியிலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் என புதிய கல்விக் கொள்கை முற்றிலுமாக அரசியல் கருவியாகவே இருக்கிறது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிவருகிறது தி.மு.க அரசு. இருந்தபோதும், தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களைப் பெயர் மாற்றி, சத்தமில்லாமல் அமல்படுத்திவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, `நான் முதல்வன்', `இல்லம் தேடிக் கல்வி', `தகைச்சால் பள்ளி', `எண...
Image
  கணக்கு அதிகாரி பணிக்கு இன்று தேர்வு தமிழக கருவூல மற்றும் கணக்கு துறையில், மூன்றாம் நிலை கணக்கு அதிகாரி பணியில், 23 காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தேர்வு அறிவிக்கப்பட்டது.இதற்கு, 479 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு, இன்று காலை மற்றும் பிற்பகலில் நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு அளவில் தமிழ் மொழி தகுதி தேர்வு, பொது படிப்புகளுக்கான பிரிவு, முதுநிலையில் கணக்கு பதிவியல் பாடம் தொடர்பான வினாக்கள், தேர்வில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது..