Posts

Showing posts from October 8, 2022
Image
  நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்   நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.  அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது உண்மையில்லை. போதை பொருள் இல்லா வளாகங்களாக பள்ளிக்கூடங்கள் மாற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் பங்கேற்ற அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.
  ஆசிரியர்களை குறைத்து மதிப்பீடு செய்கிறது திமுக அரசு: ஓபிஎஸ் கண்டனம் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அரசாணையில், மாதச்சம்பளம் ரூ.5000 மற்றும் பணிக்காலம் 11 மாதங்கள் மட்டுமே என குறிப்பிட்டுள்ளதை உடனடியாக ஆராய்ந்து மாத ஊதியம், பணிக்காலத்தை நீட்டிக்க உடனடி நடவடிக்கையை எடுக்கவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்களுக்கு தூண்டுகோலாக, வழிகாட்டியாக, உந்து சக்தியாக அவர்களை வெற்றிப்பதையில் அழைத்துச் செல்பவர்கள் ஆசிரியர்கள்.  மாணவர்களுக்கு கல்வியை மட்டுமல்லாமல், நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும், சமூகத்தை எதிர்கொள்வதற்கான துணிச்சலையும் பயிற்றுவிப்பவர்கள் ஆசிரியர்கள். 'எழுத்தறிவித்தவன் இறைவனாவான்' என்பதற்கேற்ப ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த ஆசிரியர்களை குறைத்து மதிப்பீடு செய்யும் வகையில் திமுக அரசு ஒர் அரசாணையை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அண்மையில், 2,381 எல்கேஜி ம...
Image
  தேர்வு எழுதியோர் கவனத்திற்கு.! TNPSC குரூப் 4 தேர்வு முடிவு வெளியாகும் தேதி.!!!! குரூப் 4 தேர்வு மூலமாக தமிழக அரசு துறையில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதனால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,138 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த தேர்வர்களுக்கு, டிசம்பர் முதல் வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகும் என TNPSC வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், முந்தைய தேர்வுகளின் கட் ஆப் மதிப்பெண்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கட் ஆப் மார்க் குறைய வாய்ப்பிருந்தாலும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது எனவும் தெரிகிறது.
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு கால அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் வெளியீடு.. ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு...!!!! தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கணினி வழி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கான அட்டவணையை http://trb.tn.nic.in/என்ற இணையதளத்தில் தேவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதித்து 1- ஐ தேர்வர்கள் இப்போதே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதிச்சீட்டு இரண்டை தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்யலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.