ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 க்கான admit card மற்றும் கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 14.10.2022 முதல் 20.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்படும் என 23.09.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிகைச் செய்தி வெளியிடப்பட்டது . கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது . தற்போது , தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு -1 ( District Admit Card.I ) இன்று 07.10.2022 முதலும் தேர்வு மையம் ( இடம் ) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு -2 ( Venue - Admit Card - II ) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் , ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Posts
Showing posts from October 7, 2022
- Get link
- X
- Other Apps
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களையே தொடர்ந்து நியமிப்பது ஏன்? மநீம கேள்வி அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை தொடர்ந்து நியமனம் செய்வது ஏன் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் எல்கேஜி யுகேஜி போன்ற வகுப்புகள் முன்னர் செயல்பட்டு வந்தன என்றும், ஆனால் அந்த வகுப்புகளை மூடிவிட முடிவு செய்யப்பட்டது என்றும், ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரூபாய் 5000 தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்து பல்லாயிரக்கணக்கானோர் வேலைக்காக காத்திருக்கும் நிலையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஏன் என்ற கேள்வியை மக்கள் நீதி மய்யம் கட்சி எழுப்பியுள்ளது குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டால் அவர்களது எதிர்காலத்தை மட்டுமின்றி மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும் என்றும் எனவே தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள் நியமனத்தை கைவிட வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எல்.கே.ஜி மாணவர் சேர்க்கை அறிவிப்பு மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கேந்திரவித்யாலயா பள்ளிகள் நாடு முழுதும் செயல்பட்டுவருகின்றது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், குறைந்த கட்டணமே வசூலிக்கப் படுகிறது. கேந்திரவித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது ஐந்திலிருந்து, நடப்பு கல்வி ஆண்டில் ஆறாக உயர்த்தப்பட்டது.இதை தொடர்ந்து, ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள், ‘பால்வாடிகா’ என்ற பெயரில், கே.வி பள்ளியில் துவங்கப்படுகிறது. 👉பால்வாடிகா முதல் பிரிவில் 3 முதல் 4 வயது வரையிலும், 👉பால்வாடிகா இரண்டாம் பிரிவில் 3 வயது முதல் 5 வயது வரையிலும், 👉பால்வாடிகா மூன்றாம் பிரிவில் 6 வயது வரையிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை, https:...
- Get link
- X
- Other Apps
கருணாநிதி இருந்திருந்தால் எங்களுக்கு வாழ்க்கை கிடைத்திருக்கும் - விரிவுரையாளர்கள் வருத்தம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்திருந்தால் எங்களுக்கு வாழ்க்கை கிடைத்திருக்கும் என பணி நீக்கம் செய்யப்பட்ட பாலிடெக்னிக் கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர். மாற்றுப்பணி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்த கௌரவ விரிவுரையாளர்கள் 1131 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று(அக்-6) முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திமுகவின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்திருந்தால் தங்களுக்கு இதுபோன்ற நிலை வந்திருக்காது எனவும், முதலமைச்சர் தங்களுக்கு ஏதாவது ஒரு மாற்றுப் பணி நிரந்தரமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 52 அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக இருந்த விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2400 ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஏற்கனவே க...
- Get link
- X
- Other Apps
எம்இ, எம்பிஏ படிப்புக்கான டான்செட் நுழைவுத் தேர்வு பிப்.25, 26-ல் நடைபெறுகிறது: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு எம்இ, எம்பிஏ உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் வரும் 2023-ம் ஆண்டில் சேர்வதற்கான டான்செட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 25, 26-ம் தேதிகளில் நடைபெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, வரும் 2023-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுக்கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: அடுத்த ஆண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 25, 26-ம் தேதிகளில் நடைபெறும். அதாவது, பிப்ரவரி 25-ம் தேதி காலை எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்டெக், எம்இ, எம்ஆர்க், எம்.பிளான் படிப்புகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதேபோல, எம்பிஏ படிப்புக்கு பிப்ரவரி 26-ல் தேர்வு நடைபெறும். சூழல்களுக்கு ஏற்ப இந்த தேர்வு தேதிகளில் மாற்றம் ...
- Get link
- X
- Other Apps
பி.எட் படிப்புக்கு 4,939 பேர் விண்ணப்பம்: சேர்க்கை கலந்தாய்வு அக்.12-ல் தொடங்கும் பி.எட் படிப்புக்கான சேர்க்கைக்கு 4,939 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு மற்றும் 14 உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை கல்வியியல் (பிஎட்) படிப்புகளுக்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பிஎட் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த செப்டம்பர் 24-ல் தொடங்கி அக்டோபர் 3-ம் தேதி நிறைவு பெற்றது. மாநிலம் முழுவதும் மொத்தம் 4,939 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் பாடவாரியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன்பின்னர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அக்டோபர் 12-ம் தேதி தொடங்கி நடைபெறும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
- Get link
- X
- Other Apps
" மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கு தினக்கூலியை விட மிக குறைவான ஊதியம்" - ராமதாஸ் ஆதங்கம்!! மழலையர் வகுப்புகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மழலையர் வகுப்புகளுக்கு தகுதியும், திறமையும் கொண்ட மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் 2,381 பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை நடத்துவதற்காக மாதம் ரூ.5,000 ஊதியத்தில் பள்ளிக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மழலையர் வகுப்புகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் தினக்கூலிகளை விட குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு மழலையர் பள்ளிகளாக மாற்றப்பட்டன. அதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்த நிலையில், மழலையர் வகுப்புகள் மூடப்படும் என்று நடப்புக் கல்வியாண்டின் தொட...
- Get link
- X
- Other Apps
அங்கன்வாடியில் அமைக்கப்பட்டுள்ள 2,381 மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: தொடர அனுமதித்து அரசாணை வெளியீடு தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷாவெளியிட்டுள்ள அரசாணை: 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகள் 2022-2023ம் கல்வி ஆண்டிலும் தொடர்ந்து செயல்பட அனுமதியும், பாடம் கற்பிக்க சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கும் அனுமதி வழங்குமாறும், அதற்கான செலவின நிதியை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக்கு வழங்கவும் தொடக்க கல்வி இயக்குநர் அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துரு விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, 2022-2023ம் கல்வி ஆண்டில் மேற்கண்ட வகுப்புகள் அதே இடத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகுப்புகளில் பாடம் நடத்த பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்யலாம் என்றும்,அந்த சிறப்பு ஆசிரியர்களுக்கு பிழைப்பூதியமாக ரூ.5 ஆயிரம் பள்ளி கல்வி மேலாண்மைக் குழுவின் மூலம் வழங்கலாம் என்றும், இந்த ஆசிரியர்களுக்கு பணிக்காலம் ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் முடிய 11 மாதங்கள் மட்டுமே என...
- Get link
- X
- Other Apps
புதுவை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவிந்த இளைஞர்கள் புதுச்சேரி அரசில் காலியாக உள்ள முதுநிலை எழுத்தர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிகள் நீண்ட வருடங்களுக்கு பிறகு நிரப்பப்பட உள்ளது. இதனால் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்புக்காக பதியப்பட்ட இளைஞர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் இன்று காலை முதல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குவிந்தனர். தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புக்கான பதிவு செய்ய இன்று காலை முதலே இளைஞர்கள் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவிந்தனர். இதனால் வேலை வாய்ப்பு அதிகாரிகள் விரைந்து பதிவு செய்வதில் திணறி வருகின்றனர்.
- Get link
- X
- Other Apps
தெற்கு ரயில்வேயில் 3154 அப்ரன்டிஸ் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! தெற்கு ரயில்வேயில் 'அப்ரென்டிஸ்' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம் : பிட்டர், வெல்டர், பெயின்டர், மோட்டார் மெக்கானிக், வயர்மேன், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், டர்னர், பிளம்பர், டீசல் மெக்கானிக், டிராப்ட்ஸ்மேன், ஏ.சி., மெக்கானிக், ஆபிஸ் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சென்னை 459, அரக்கோணம் 67, பெரம்பூர் 817, மதுரை 40, கோவை போத்தனுார் 59, திருச்சி 487, சேலம் 119, பாலக்காடு 700, திருவனந்தபுரம் 386 உட்பட மொத்தம் 3154 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவுகளில் ஐ.டி.ஐ.,, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வயது : 29.9.2022 அடிப்படையில் 15 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. பணியிடம் : சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம...