20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் - மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவற்றில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்கள் ஒன்றிய அரசின் தலைமைச் செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கும், ஆய்வாளர் பணியிடங்கள் (Inspector) ஒன்றிய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றிலும் மற்றும் உதவ...
Posts
Showing posts from October 6, 2022
- Get link
- X
- Other Apps
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை: விண்ணப்பிப்பது எப்படி? 2022-23 கல்வியாண்டுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பல்வேறு முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மத்தியப் பல்கலைக்கழக தகுதித் தேர்வில் ( CUET-PG முதுநிலை பட்டப்படிப்பு) 2022 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுளளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் www.pondiuni.edu.in/admissions-2022-23/ என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வரும் 15ம் தேதி பிற்பகல் 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
- Get link
- X
- Other Apps
கால்நடை படிப்புக்கான விண்ணப்ப பதிவு நிறைவு: விண்ணப்பித்தோர் எண்ணிக்கை அதிரடியாக குறைந்தது கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் விண்ணப்ப பதிவு குறைந்துள்ளது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் செப்டம்பர் 12ம் தேதி தொடங்கியது. சென்னை, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் மருத்துவப் படிப்புகளில் 580 இடங்களும், இதுதவிர உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு ஆகியவற்றில் உள்ள 100 இடங்களும் என மொத்தம் 680 இடங்கள் இருக்கின்றன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் போக மீதமுள்ள இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 3ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் மருத்துவப் படிப்புகளில் சேர 13 ஆயிரத்து 470 பேரும், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேருவதற்கு 2...
- Get link
- X
- Other Apps
தமிழ்நாடு சிறைத்துறையில் ஜெயிலர் காலிப்பணியிடம் தமிழ்நாடு சிறைத்துறையில் Jailor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: Jailor (Men) - 6 Jailor (Special Prison for Women) - 2 கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Master's degree in Criminology and Criminal Justice Administration அல்லது a Master's degree in Social Work படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Master's degree in Criminology and Criminal Justice Administration அல்லது a Master's degree in Social Work படித்தவர்களுக்கு வயது வரம்பு 37ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பள விவரம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.36,900 முதல் ரூ.1,35,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணங்கள்: பதிவுக்கட்டணமா...
- Get link
- X
- Other Apps
மக்கள் நலப் பணியாளர் பணியில் சேர அக்.12-ம் தேதி வரை கால அவகாசம் விருப்ப விண்ணப்பம் சமர்பிக்காத மக்கள் நலப்பணி யாளர்கள் பணியில் சேர அக்.12 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள அறிக்கை: ஊரக வளர்ச்சித் துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் இறந்த அவர்களின் வாரிசுதாரர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய, கடந்த 13.6.2022 முதல் 18.6.2022 வரை விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விருப்ப விண்ணப்பங்கள் அளித்து பணியில் சேராத முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுதார்களுக்கு வரும் 12-ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. எனவே, பணியிழந்து இதுவரை விண்ணப்பம் சமர்ப்பிக்காத தகுதியானவர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் சம்பந்தப்பட்ட பிடிஓவை (கிராம ஊராட்சி ) தொடர்பு கொண்டு பணியில் சேரலாம்.
- Get link
- X
- Other Apps
ரூ.5,000 தொகுப்பூதியத்தில் LKG, UKG-க்கு ஆசிரியர்கள் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என அறிவிப்பு. அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
இளைஞர்களே ரெடியா?.. அக்டோபர் 15 சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர் வரை அனைவரும் பங்கேற்கலாம். இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
- Get link
- X
- Other Apps
எஸ்.எஸ்.சி. தேர்வு: 20,000 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவற்றில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்கள் ஒன்றிய அரசின் தலைமைச் செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கும், ஆய்வாளர் பணியிடங்கள் (Inspector) ஒன்றிய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றிலும் மற்றும் உதவ...