
பகுதிநேர விரிவுரையாளர்களை பணியமர்த்த வேண்டாம்: கல்வி ஆணையர் உத்தரவு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலங்களில் காலியாக உள்ள விரிவுரையர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால். கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து பகுதிநேர விரிவுரையாளர்கள் மற்றும் முழுநேர தொகுப்பூதிய விரிவுரையளார்களை பணியமர்த்த வேண்டாம் என்று அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கும் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக கவுரவ விரிவுரையாளர்களைப் பணியமர்த்தி கொள்ள அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது, இந்நிலையில், 27.11.2019 அன்று விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஜுலை மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து, உத்தேச தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து பகுதிநேர விரிவுரை...