Posts

Showing posts from October 4, 2022
Image
  முதுநிலை கல்வியியல் படிப்புக்கு அக்.6 முதல் அக்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: கல்லூரி கல்வி இயக்ககம் தகவல் முதுநிலை கல்வியியல் படிப்புக்கு அக்.6 முதல் அக்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18-ம் தேதி முதல் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
Image
  MBBS , BDS படிப்புகளுக்கு அக். 11 முதல் கலந்தாய்வு. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு அக்டோபர் 11-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கும் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு அக். 20 வரை நடைபெறும். அக்டோபர் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் மாநிலங்களில் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம். மருத்துவக் கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்தவர்கள், அக்டோபர் 28ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற்றுவிட வேண்டும். இதுபோல,  அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும். அதுபோல, மாநிலங்களுக்கான 2அம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி 18ஆம் தேதி வரை நடைபெறும். இந்த மருத்துவக் கலந்தாய்வுகளில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் நவம்பர் 18ஆம் தே...
Image
  ரேஷன் விற்பனையாளர், கட்டுநர் பணிக்கு ஆளெடுப்பு; அக். 13 முதல் விண்ணப்பிக்கலாம்! ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு அக். 13ம் தேதி முதல் நவ. 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை, அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.  மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் குழு உறுப்பினர்கள், கூட்டுறவு கடைகளின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் தேர்வு தொடர்புடைய விதிகளில் சில திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.  அதன்படி, 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படும் ஒரு வருவாய்க் கோட்டாட்சியர், மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.  மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கான விற்பனையாளர், கட்டுநர் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தேசிக்...
Image
  தமிழகத்தில் 2,748 பணியிடங்கள்.. அரசு புதிய அதிரடி உத்தரவு...!!!! தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு துறையிலும் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் துறைவாரியாக காலியாக உள்ள பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளாக நடைபெற்ற வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வட்டாட்சியர் அளவில் அக்டோபர் 10ஆம் தேதி விளம்பரம் செய்ய வேண்டும். விண்ணப்பம் அளிக்க நவம்பர் 7ஆம் தேதி இறுதி நாள் ஆகும். விண்ணப்பங்களை பரிசீலிக்க நவம்பர் 14ஆம் தேதி இறுதி நாளாகவும் நிர்ணயிக்க வேண்டும்.நவம்பர் 30ஆம் தேதி எழுத்து தேர்வு மற்றும் டிசம்பர் 15 , 16 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Image
  தமிழக ரேஷன் கடை பணிக்கு ஆட்கள் சேர்ப்பு – சூப்பர் அறிவிப்பு ! தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள ரேஷன் கடை ஊழியர் பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இப்பணிக்கு அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ரேஷன் கடை வேலைவாய்ப்பு: நியாயவிலைக்கடை விற்பனையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு போதுமான ஆட்கள் இல்லாத காரணத்தாலும், கடந்த 5 வருடங்களுக்கு மேலாகியும் பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படாத காரணத்தாலும் இப்பணிக்கு 4,000 பேரை நியமிக்க தமிழக அரசின் கூட்டுறவுத் துறை முடிவு செய்திருக்கிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் என்ற அமைப்பின் மூலம் நேர்காணல் முறையில் நிரப்பப்பட உள்ளது. ரேஷன் கடை, அங்கன்வாடி பணிக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு, முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சி, ஆசிரியர் கல்வி பயின்ற பட்டதாரிகள் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். ஆனால் இதில் லஞ்சம், முறைகேடு நடைபெற்றதால் இந்த நியமன முறையை அரசு தடை செய்தது. எனவே இந்த ...